Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துாய்மை பணியாளர்கள் போராட்டம்

ADDED : ஜூலை 16, 2024 02:04 AM


Google News
ஆத்துார்: சேலம் மாவட்டம், நரசிங்கபுரம் நகராட்சியில், 18 வார்டுகள் உள்-ளன. கடந்த, 2006 முதல் ஒப்பந்த அடிப்படையில், 71 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு தினமும், 308 ரூபாய் கூலி வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச கூலித்தொகை உள்-பட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை, 7:00 மணியளவில், நகராட்சி அலுவலகம் முன், பணிக்கு செல்லாமல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்தம் எடுத்துள்ள தனியார் நிறுவனம், நகராட்சி அலுவலர்கள் மாலை வரை பேச்சு-வார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை. பின், மழை பெய்து கொண்டிருந்ததால், இரவு, 7:30 மணியளவில் போராட்-டத்தை நிறுத்தி கொள்வதாகவும், நாளை (இன்று) முதல் மீண்டும் போராட்டம் தொடங்குவதாக துாய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் உமா, செல்வி ஆகியோர் கூறுகையில், தினக்கூலி, 308 ரூபாய் வழங்கப்படுகி-றது. குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் கீழ், நிர்ணயம் செய்துள்ள, 638 ரூபாய் வழங்க வேண்டும். ஒப்பந்தம் எடுத்துள்ள 'ெஹல்த் கேர்' நிறுவனம், 2023 மே முதல், வருங்கால வைப்பு தொகை செலுத்தாமல் உள்ளது. மருத்துவ காப்பீடு, பணியில் உயிரிழப்-புக்கு இன்சூரன்ஸ் வழங்க வேண்டும். 18 ஆண்டுகளாக பணி செய்து வரும் துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகர-ணங்கள், சீருடை, மழைக்கால பாதுகாப்பு உடைகள் வழங்க வேண்டும். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடத்தவுள்ளோம்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us