Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சம்பா சாகுபடி நீர் திறப்பு நிறுத்தம்

சம்பா சாகுபடி நீர் திறப்பு நிறுத்தம்

சம்பா சாகுபடி நீர் திறப்பு நிறுத்தம்

சம்பா சாகுபடி நீர் திறப்பு நிறுத்தம்

ADDED : பிப் 11, 2024 02:01 PM


Google News
மேட்டூர் : டெல்டா பகுதி விவசாயிகள், சம்பா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த, 3 முதல், 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து படிப்படியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம், 5,600 கன அடியாக இருந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு அணை நீர்மட்டம், 66.52 அடி, நீர் இருப்பு, 29.78 டி.எம்.சி.,யாக காணப்பட்டது. அணைக்கு நீர்வரத்து, 58 கனஅடியாக இருந்தது. அதேநேரம் அணையில் இருந்து வினாடிக்கு, 4,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் மாலை, 6:00 மணி முதல், சாகுபடிக்கு திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு குடிநீருக்கு மட்டும், 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us