ADDED : பிப் 24, 2024 03:37 AM
நேர்மையாக தேர்தல்
வி.சி., போராட்டம்
சேலம்: லோக்சபா தேர்தல் நேர்மையாக நடப்பதை, அதன் கமிஷன் உறுதிப்படுத்த வி.சி., ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் செயலர் காஜாமைதீன் தலைமை வகித்தார்.
அதில் லோக்சபா ஓட்டுப்பதிவில், பா.ஜ., மோசடி செய்ய வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டி ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். கமிஷன், தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து கமிஷனை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். வி.சி., தலைமை நிலைய செயலர் இளஞ்சேகுவேரா, தி.மு.க.,வின், சேலம் எம்.பி., பார்த்திபன், இ.கம்யூ., மாவட்ட செயலர் மோகன், ம.தி.மு.க., மாவட்ட செயலர் சங்கமேஸ்வரன், வி.சி., கட்சி மாநகராட்சி கவுன்சிலர் இமயவர்மன் உள்பட பலர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்குசமூக வலைதளம் அறிமுகம்
சேலம்: கிராம சீரமைப்பு, வளர்ச்சி திட்டம், 'எனேபெல் இந்தியா' சார்பில், 'குரல் நமது' எனும் சமூக வலைதளம், மாற்றுத்திறனாளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான கருத்தரங்கம், சேலம் ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில் நேற்று நடந்தது. கிராம சீரமைப்பு, வளர்ச்சி திட்ட இயக்குனர் ரங்கநாதன் தலைமை வகித்தார். அதில் அண்ணா பயிற்சி நிறுவன துணை கலெக்டர் ரமேஷ், சேலம் தொழில் மைய பொது மேலாளர் சிவகுமார், பெரியார் பல்கலை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பேசினர். திரளான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.