ADDED : ஜூன் 09, 2024 04:36 AM
ரயிலில் இளம்பெண்ணிடம்
சில்மிஷம்: முதியவர் கைது
சேலம்: ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில், இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையை சேர்ந்த, 31 வயது இளம்பெண், கடந்த, 6ல் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஈரோட்டிலிருந்து சென்னைக்கு முன்பதிவு செய்து பயணித்தார். அதே பெட்டியில் பயணித்த சேலம் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த உசேன்பாஷா, 71, என்பவர் சில்மிஷம் செய்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அப்பெண், டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளிக்கவே, ஜோலார்பேட்டையில், உசேன்பாஷாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து, உசேன்பாஷாவை கைது செய்தனர்.
பாத்திர கடை உரிமையாளர்குண்டர் சட்டத்தில் கைது
சேலம்: சேலத்தில் பாத்திர கடை உரிமையாளர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம், செவ்வாய்பேட்டையை சேர்ந்தவர் பிரபாகரன், 47, பாத்திர கடை உரிமையாளர். இவரை, சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், பண மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் மீது 2 வழிப்பறி, 5 மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே 2016ல், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வந்ததால், மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தமிழரசி, துணை கமிஷனர் மதிவாணன் ஆகியோர், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தனர். இதையேற்று, கமிஷனர் விஜயகுமாரி, பிரபாகரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.