/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டைசேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் பாலாலய பிரதிஷ்டை
ADDED : ஜன 25, 2024 12:54 PM
சேலம்:சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில், நேற்று பாலாலய பிரதிஷ்டை நடத்தப்பட்டது.சேலம், கோட்டை பெருமாள் கோவில் என அழைக்கப்படும் அழகிரிநாத சுவாமி கோவில் மாநகரில் பிரசித்தி பெற்றது.
12 ஆண்டுகளுக்கு மேலானதால், இக்கோவிலில் கும்பாபி ேஷகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக பாலாலய பிரதிஷ்டை விழா கடந்த, 22ல், சிறப்பு ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று காலை புண்ணியாஹம், நித்ய ஹோமம், தாரா ஹோமம், மஹா பூர்ணாஹூதியை தொடர்ந்து, வேத இதிகாச, புராண, பிரபந்த சாற்றுமுறை, யாத்ராதானம் ஆகியவை நடத்தப்பட்டன.காலை, 10:00 மணி முதல் பாலாலய பிரதிஷ்டை செய்யப்பட்டது. கோவிலில் பெருமாளை எழுந்தருள செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சுதர்சன பட்டாச்சாரியார், ஸ்ரீராம பட்டாச்சாரியார், கவுதம் பட்டாச்சாரியார் பூஜைகளை நடத்தி வைத்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் செயல் அலுவலர் அனிதா, அறங்காவலர் குழு தலைவர் வெங்கடேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.