/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கல் சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கல்
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கல்
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கல்
சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க.,வில் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கல்
ADDED : ஜூன் 28, 2025 04:08 AM
வாழப்பாடி: வாழப்பாடியில் உள்ள, தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட அலுவலகத்தில், ஏற்காடு சட்டசபை தொகுதிக்குட்பட்ட வாழப்-பாடி, அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு ஒன்றிய நிர்வாகிக-ளுக்கு, உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார்.
அதில் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள வாக்காளர்களில், 30 சத-வீதம் பேரை உறுப்பினராக சேர்க்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்-பட்டது. தொடர்ந்து, மொபைல் போன் மூலம் உறுப்பினர் சேர்க்கும் வழிமுறைகள் குறித்து, நிர்வாகிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து நிர்வாகிகளுக்கு, உறுப்பினர் சேர்க்கை படிவம், தனித்தனியாக வழங்கப்பட்டது.
மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலர்கள் விஜயகுமார், ரத்தினவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் கோபால், பேரூர் செயலர் பாபு, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாலு, ஒன்றிய செயலர்கள், தேர்தல் பணி குழு ஒருங்கிணைப்பா-ளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.