/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரூ.500 கோடி மோசடி வழக்கு; பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை ரூ.500 கோடி மோசடி வழக்கு; பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை
ரூ.500 கோடி மோசடி வழக்கு; பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை
ரூ.500 கோடி மோசடி வழக்கு; பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை
ரூ.500 கோடி மோசடி வழக்கு; பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகை
ADDED : ஜூன் 17, 2025 01:18 AM
சேலம்; திருவண்ணாமலை மாவட்டம், கோவூரை சேர்ந்தவர் ராஜேஷ், 35. இரு ஆண்டுகளுக்கு முன், சேலம் ஸ்வர்ணபுரியில், 'ரீகிரியேட் பியூச்சர் இந்தியா' என்ற நிறுவனம் துவங்கி, இரட்டிப்பு பணம் தருவதாக முதலீடு வசூலித்தார்.
முதலீடு செய்த நபர்களை மிக்ஸி, கிரைண்டர், குக்கர் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையிலும் ஈடுபடுத்தினார். விற்பனை பொருட்களுக்கு தலா, 150 ரூபாய் கமிஷன் வழங்கப்பட்டது.
ஒரு முதலீட்டாளர், மூன்று பேரை அறிமுகம் செய்வதும், அந்த மூவர், தலா மூன்று பேரை சேர்ப்பதும் என, சங்கிலி தொடர்போல மொத்தம், 15,000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்து, அறிவித்தப்படி இரட்டிப்பு தொகை தராமல், 500 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளார். சேலம் பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, பிப்., 22ல், அவரை சிறையில் அடைத்தனர்.
தற்போது ஜாமினில் வந்துள்ள ராஜேஷ், ஒரு மாதமாக பள்ளப்பட்டி ஸ்டேஷனில் கையெழுத்திட்டு வருகிறார். இரு நாட்களுக்கு முன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பணத்தை திருப்பி தர இருப்பதாக பரவிய தகவலால், சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சேசன்சாவடி தனியார் மண்டபத்துக்கு மக்கள் திரண்டனர். ஆனால், மண்டபம் மூடி கிடந்ததால் அதிருப்தியுடன் திரும்பினர்.
இந்நிலையில், ராஜேஷ் போலீசில் ஆஜராவதையறிந்த மக்கள் நேற்று காலை, 10:00 மணியளவில், பள்ளப்பட்டி ஸ்டேஷன் முன் திரண்டனர். பின், கலெக்டர் அலுவலகம் சென்று முற்றுகையிட முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்தனர்.
டி.எஸ்.பி., சந்திரசேகரன் கூறுகையில், ''நேற்று ஒரே நாளில், 100 பேர் புகார் அளித்துள்ளனர். விடுபட்டவர்கள் புகார் அளித்தால், இவ்வழக்கில் துரிதமாக மேல் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.