/உள்ளூர் செய்திகள்/சேலம்/கொலை வழக்கில் ரவுடியின் கூட்டாளிகள் கைதுகொலை வழக்கில் ரவுடியின் கூட்டாளிகள் கைது
கொலை வழக்கில் ரவுடியின் கூட்டாளிகள் கைது
கொலை வழக்கில் ரவுடியின் கூட்டாளிகள் கைது
கொலை வழக்கில் ரவுடியின் கூட்டாளிகள் கைது
ADDED : பிப் 24, 2024 03:35 AM
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த வெள்ளி வியாபாரி சங்கர், 42. கடந்த, 2ல் கார் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதில் அவரது உறவினர்கள், 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ரவுடி பாஸ்கர், நேற்று முன்தினம் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
இதையடுத்து அவரது கூட்டாளிகளான, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த கார் டிரைவர் ரஞ்சித்குமார், 28, அடைக்கலம் கொடுத்த, பெங்களூரு, அத்திப்பள்ளியை சேர்ந்த சங்கர், 40, ஆகியோரை நேற்று முன்தினம், தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் பாஸ்கரை, காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ள போலீசார், அவரது தம்பி ராஜாவை தேடி வருகின்றனர்.