Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/திட்டங்களுக்கு நிதி கேட்டு சாலை மறியல்; ஊரக வளர்ச்சித்துறையினர் 170 பேர் கைது

திட்டங்களுக்கு நிதி கேட்டு சாலை மறியல்; ஊரக வளர்ச்சித்துறையினர் 170 பேர் கைது

திட்டங்களுக்கு நிதி கேட்டு சாலை மறியல்; ஊரக வளர்ச்சித்துறையினர் 170 பேர் கைது

திட்டங்களுக்கு நிதி கேட்டு சாலை மறியல்; ஊரக வளர்ச்சித்துறையினர் 170 பேர் கைது

ADDED : ஜன 08, 2025 07:02 AM


Google News
சேலம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில், 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம், கோட்டை மைதான பகுதியில் நேற்று, சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில் தலைமை வகித்தார்.

மாநில துணைத்தலைவர் திருவேரங்கன் பேசுகையில், ''தமிழக அரசு எந்த திட்டத்துக்கும் முழுமையாக நிதி ஒதுக்குவது கிடையாது. குறிப்பாக கருணாநிதி கனவு இல்ல திட்டத்துக்கு நிதி ஒதுக்காததால் அதன் பயனாளிகள், அரசு ஊழியர்கள் மீது வெறுப்பை உமிழ்கின்றனர்,'' என்றார்.தொடர்ந்து ஊராட்சிகளில் காலியாக உள்ள செயலர் பணியிடங்களை நிரப்புதல்; கணினி உதவியாளர்களை பணி வரன்முறைப்படுத்தல்; உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வை, தாமதமின்றி வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியவர்கள், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின் போலீசார், மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர்கள் பிரேமகுமாரி, செந்தில்குமாரி, தேவிபிரியா, மாவட்ட பொருளாளர் வடிவேல், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாணகுமார், உமாசங்கர், சீனிவாசன் உள்பட, 170 பேரை கைது செய்தனர்.

அலுவலகம் 'வெறிச்'

சாலை மறியலில் பங்கேற்க ஏராளமானோர் சென்றதால், ஓமலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் பலரும் பணியில் இல்லை. அலுவலகம் வெறிச்சோடியது. காடையாம்பட்டி, நங்கவள்ளி பி.டி.ஓ., அலுவலகங்களிலும் பெரும்பாலான அலுவலர்கள் இல்லாமல் வெறிச்சோடின. அதேபோல் தாரமங்கலம் ஒன்றிய அலுவலர்கள் பணியை புறக்கணித்தனர். இதனால் அதன் பிரதான கேட் மூடப்பட்டிருந்தது. சிறு கேட் வழியே சில பணியாளர்கள் மட்டும் சென்றனர். பெரும்பாலான அலுவலர்கள், மக்கள் இன்றி அலுவலகம் வெறிச்சோடியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us