/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பணி பாதுகாப்பு வழங்கக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
பணி பாதுகாப்பு வழங்கக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
பணி பாதுகாப்பு வழங்கக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
பணி பாதுகாப்பு வழங்கக்கோரி வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2025 02:15 AM
சேலம், சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரி, வருவாய்த்துறை அலுவலர் சங்க கூட்டமைப்பினர், மாநிலம் முழுதும் நேற்று, தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி சேலத்தில், வள்ளுவர் சிலை முதல், கோட்டை மைதானம் வரை, மாவட்ட தலைவர் அருள்பிரகாஷ் தலைமையில் ஏராளமானோர், பேரணியில் ஈடுபட்டனர்.
முன்னதாக கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் திருவேரங்கன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதனால் கலெக்டர் அலுவலக வருவாய் துறை பிரிவு அலுவலகங்கள் வெறிச்சோடின. தாசில்தார், ஆர்.ஐ., அலுவலகங்களிலும், ஆட்கள் இல்லாததால் பணிகள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறியதாவது:
வருவாய்த்துறையில் பணிபுரியும் அனைவரது உயிர், உடைமைகளுக்கு பாதிப்பு ஏற்படாத படி பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். அலுவலர் மீது தாக்குதல் நடந்தால், குற்றவாளிக்கு தண்டனை வழங்க, சிறப்பு சட்டம் நிறைவேற்ற வேண்டும். காலியாக உள்ள வருவாய் துறை பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஓமலுார் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ரவிக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர், நில அளவையர், வி.ஏ.ஓ.,க்கள், அலுவலக உதவியாளர்கள் என, 107 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். 3 துணை தாசில்தார்கள் மட்டும் பணியில் இருந்தனர். இதனால் ஓமலுார் தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது. பல்வேறு தேவைக்கு, அங்கு வந்த மக்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதேபோல் காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நாகூர்மீரான், அலுவலக உதவியாளர்கள் என, 4 பேர் மட்டும் பணியில் இருந்தனர். மற்றவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் வெறிச்சோடியது. நாகூர்மீரான், வேறு சங்கத்தில் உள்ளதால், அவர் போராட்டத்தில் ஈடுபடாதது தெரிந்தது.