ஓய்வு பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 05, 2024 01:05 AM
சேலம்: தமிழக அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து தலைமை அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்-பாட்டம் நேற்று நடந்தது.
தலைவர் பழனிவேலு தலைமை வகித்தார். அதில், 103 மாத டி.ஏ., உயர்வை உடனே வழங்குதல்; 2022 டிசம்பர் முதல், ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்களை வழங்குதல், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தல் உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். பொதுச்செ-யலர் அன்பழகன், மாநில துணைத்தலைவர் குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.