ADDED : செப் 10, 2025 02:20 AM
சேலம், சேலம் ராமகிருஷ்ணா மடத்தின் கோவில் கும்பாபிேஷகம் கடந்த ஆக., 31ல் நடந்தது. செப்., 1 முதல், மண்டல பூஜை தொடங்கி நடந்து வருகிறது. அதன், 9ம் நாளான நேற்று சேலத்தில் உள்ள விஷ்ணு சஹஸ்ர நாம பாராயண குழுக்களை சேர்ந்த, 108 பெண்கள், அகண்ட விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் செய்தனர்.
இன்று மாலை, சேலம் மேடை மெல்லிசை கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. நாளை, மூல மந்திர ஜப பாராயணம் நடக்க உள்ளது. இரவு, 7:00 மணிக்கு தஞ்சாவூர் ஸ்ரீராம சாஸ்திரிகள், 'குரு கிருபை' என்ற தலைப்பில் உபன்யாசம் செய்ய உள்ளார். இத்துடன் மண்டல பூஜை நிறைவு பெறும்.