/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மழையால் விளைச்சல் பாதிப்பு: பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்வு மழையால் விளைச்சல் பாதிப்பு: பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்வு
மழையால் விளைச்சல் பாதிப்பு: பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்வு
மழையால் விளைச்சல் பாதிப்பு: பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்வு
மழையால் விளைச்சல் பாதிப்பு: பீன்ஸ் விலை கிலோவுக்கு ரூ.50 உயர்வு
ADDED : ஜூன் 05, 2025 01:48 AM
சேலம், தமிழகத்தில் பரவலாக பருவமழை பெய்து வருவதால், மலை பயிர்களான கேரட், பீட்ரூட், பீன்ஸ், உருளைக்கிழங்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பீன்ஸ் விளைச்சல் அதிகமாக பாதிக்கப்பட்டு, மார்க்கெட்டுகளுக்கு வரத்து சரிந்துள்ளது.
குறிப்பாக சேலம் காய்கறி மார்க்கெட்டுக்கு, ஒரு மாதத்துக்கு முன் வரை, தினமும் ஒரு டன் பீன்ஸ் வரத்து இருந்த நிலையில், படிப்படியாக குறைந்து, 10 நாட்களாக, 100 கிலோவுக்கு குறைவாகவே வருகிறது. இதனால் அதன் விலை உயர்ந்து வருகிறது. கடந்த வாரம் கிலோ பீன்ஸ், 180க்கு விற்ற நிலையில் நேற்று, 50 ரூபாய் அதிகரித்து, 230 ரூபாய்க்கு விற்பனை
செய்யப்பட்டது.