Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அரசு சார்பில் திருமணம் மணமக்களுக்கு சீர் வழங்கல்

அரசு சார்பில் திருமணம் மணமக்களுக்கு சீர் வழங்கல்

அரசு சார்பில் திருமணம் மணமக்களுக்கு சீர் வழங்கல்

அரசு சார்பில் திருமணம் மணமக்களுக்கு சீர் வழங்கல்

ADDED : செப் 05, 2025 01:37 AM


Google News
தாரமங்கலம், ஆவணி கடைசி வளர்பிறை முகூர்த்தத்தை ஒட்டி, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் நேற்று, 24 திருமணங்கள் நடந்தன.

இதனால் அதிகாலை, 4:00 மணி முதலே, மேள தாளம் முழங்க, மணமக்கள், உறவினர்களால், கோவில் வளாகம் நிரம்பி இருந்தது. அதேபோல் கோவிலில், அறநிலையத்துறை சார்பில் ஒரு திருமணம் நடந்தது.அதில், 4 கிராம் தங்கம், 70,000 ரூபாய் மதிப்பில் வீட்டு உபயோகப் பொருட்களை, மணமக்களுக்கு, நகராட்சி தலைவர் குணசேகரன் வழங்கினார். கோவில் செயல் அலுவலர் ஜீவானந்தம் உள்ளிட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us