ADDED : செப் 10, 2025 02:16 AM
ஆத்துார், ஆத்துார், மந்தைவெளியை சேர்ந்தவர் மணிகண்டன், 26. இவர் கடந்த, 7 இரவு, வீடு முன் நிறுத்தியிருந்த, 'டியோ' மொபட்டை, மறுநாள் காணவில்லை. அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராவை பார்த்தபோது, ஒருவர் திருடிச்சென்ற காட்சி பதிவாகியிருந்தது.
இதுகுறித்து மணிகண்டன் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் விசாரித்ததில், அம்பேத்கர் நகரை சேர்ந்த, திருமான், 22, திருடியது தெரிந்தது. அவரை, நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது, ஆத்துார் டவுன், சேலம் பள்ளப்பட்டி ஸ்டேஷன்களில் ஏற்கனவே திருட்டு வழக்குகள் உள்ளன.