/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஏகலைவா மாதிரி பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட பூஜை ஏகலைவா மாதிரி பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட பூஜை
ஏகலைவா மாதிரி பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட பூஜை
ஏகலைவா மாதிரி பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட பூஜை
ஏகலைவா மாதிரி பள்ளிக்கு நிரந்தர கட்டடம் கட்ட பூஜை
ADDED : ஜூலை 03, 2025 01:35 AM
ஏற்காடு, ஏற்காடு தாசில்தார் அலுவலகம் அருகே அரசு ஏகலைவா மாதிரி உறைவிடப்பள்ளி செயல்பட்டது. அங்கு போதிய இடவசதி, அடிப்படை வசதி இல்லை என, சேலம் அருகே காரிப்பட்டிக்கு தற்காலிகமாக மாற்ற ஏற்பாடு நடந்தது. இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த, 29ல், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் சேர்ந்து, ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் போராட்டம் நடத்தினர். அப்போது, நிரந்தர பள்ளி கட்டட பணியை விரைவில் தொடங்க வலியுறுத்தினர்.
இந்நிலையில் நேற்று, ஏற்காடு, புலியூரில் அரசுக்கு செந்தமான, 20 ஏக்கர் நிலத்தில், 16 வகுப்பறைகள், 240 மாணவ, மாணவியர் தங்குவதற்கு அறைகள், விளையாட்டு மைதானம் என, 29 கோடி ரூபாய் மதிப்பில் பணி மேற்கொள்ள பூமி பூஜை நடந்தது. அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஏற்காடு எம்.எல்.ஏ., சித்ரா, பணியை தொடங்கிவைத்தார். பழங்குடியினர் நல திட்ட அலுவலர் சுகந்தி பரிமளம், தாசில்தார் செல்வராஜ், தலைமை ஆசிரியை செல்வராணி, அரசு அதிகாரிகள், மக்கள் பங்கேற்றனர்.