பொங்கல் பரிசு நாமம்: கவுன்சிலர் வலம்
பொங்கல் பரிசு நாமம்: கவுன்சிலர் வலம்
பொங்கல் பரிசு நாமம்: கவுன்சிலர் வலம்
ADDED : ஜன 04, 2024 10:16 AM
ஆத்துார்: ஆத்துார் நகராட்சி, 11வது வார்டு கவுன்சிலர், அ.தி.மு.க.,வை சேர்ந்த உமாசங்கரி, 45. இவர் நேற்று, 'விடியா தி.மு.க., அரசின் பொங்கல் பரிசு நாமம்' என அச்சிட்டு, அதை, 11, 12வது வார்டுகளில் உள்ள பெண்களிடம் கொடுத்தார். தொடர்ந்து அனைவரும் அதை ஏந்தி, இரு வார்டுகளின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று வந்தனர்.
இதுகுறித்து உமாசங்கரி கூறுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில், 2,500 ரூபாய் உள்பட பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், அரிசி, சர்க்கரை மட்டும் வழங்கப்படுகிறது. 1,000 ரூபாய் வழங்குவதாக கூறிவிட்டு, தி.மு.க., மக்களை ஏமாற்றி வருகிறது. இந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்களில் மக்களுக்கு, 'நாமம்' போட்டுள்ளதை வெளிப்படுத்தும்படி, வார்டுகளில் வலம் வந்தோம்,'' என்றார்.