பேன் போடுங்க சார்... மாணவர்கள் அவதி
பேன் போடுங்க சார்... மாணவர்கள் அவதி
பேன் போடுங்க சார்... மாணவர்கள் அவதி
ADDED : ஜூன் 11, 2025 02:33 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ், ஆங்கில வழிக்கல்வியில் 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு, 6 முதல் பிளஸ் 2 வரையில், 30 வகுப்பறைகள் உள்ளன.
பல வகுப்பறைகளில் மின் விசிறிகள் இல்லை. வெயில் நேரத்தில் வியர்வை, புழுக்கம், காற்றோட்டம் இல்லாமல் மாணவ, மாணவியர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மின் விசிறி பொருத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், '5 வகுப்பறைகளில் மட்டும் மின் விசிறி இல்லை. பழுதான பேனை சரிசெய்ய கொடுத்துள்ளோம். புது மின் சாதன பொருட்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் வகுப்பறைகளில் பேன் பொருத்தப்படும்' என்றனர்.