/உள்ளூர் செய்திகள்/சேலம்/அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய மக்கள்அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய மக்கள்
அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய மக்கள்
அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய மக்கள்
அரசு பள்ளிக்கு கல்விச்சீர் வழங்கிய மக்கள்
ADDED : ஜன 13, 2024 03:39 AM
இடைப்பாடி: இடைப்பாடி அருகே ரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளி தாரமங்கலம் கல்வி மாவட்டத்தில் சிறந்ததாகவும், 'ஸ்மார்ட் வகுப்பு' கொண்ட பள்ளியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு படிக்கும் மாணவ, மாணவியர், கல்வி மாவட்டத்தில் சிறந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதை கொண்டாடும்படி, இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரின் பெற்றோர், ஊர்மக்கள் மூலம், பள்ளிக்கு நேற்று கல்வி சீர் வழங்கப்பட்டது. முன்னதாக கொங்கணாபுரம் பஸ் ஸ்டாண்டில், குரும்பப்பட்டி ஊராட்சி தலைவர் மணி தொடங்கி வைத்தார். அங்கிருந்து ரெட்டிப்பட்டி வரை, மேள, தாளம் முழங்க, 4 கி.மீ., நடந்து வந்து, பள்ளியில் சீர் கொடுத்தனர். மேலும் இப்பள்ளியில் சிறந்த மாணவ, மாணவியர், 'சாரட்' வண்டி மூலம் அழைத்து வரப்பட்டனர். மர டேபிள், சேர், சிலேட், பேனா, விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் வட்டார கல்வி அலுவலர் செந்தில்குமார், தலைமை ஆசிரியர் பெருமாள், ஆசிரியர் முனிஷ் பங்கேற்றனர்.பொங்கல் சீர்பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர், கையில் கரும்பு, 100 ரூபாய் நோட்டுடன், அவர்களது பெற்றோர் பொங்கல் சீர் வரிசைவுடன், மேள, தாளம் முழங்க, கட்டபுளியமரம் மாரியம்மன் கோவிலில் இருந்து பள்ளியை நோக்கி ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து அங்கு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். பின் மாணவ, மாணவியர், பெற்றோர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கினர்.