/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மழையால் அறுந்த மின் கம்பி இரவு முழுவதும் மக்கள் அவதி மழையால் அறுந்த மின் கம்பி இரவு முழுவதும் மக்கள் அவதி
மழையால் அறுந்த மின் கம்பி இரவு முழுவதும் மக்கள் அவதி
மழையால் அறுந்த மின் கம்பி இரவு முழுவதும் மக்கள் அவதி
மழையால் அறுந்த மின் கம்பி இரவு முழுவதும் மக்கள் அவதி
ADDED : ஜூன் 24, 2025 01:06 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி பகுதியில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு கனமழை கொட்டியது. அதனால், மின் தடை ஏற்பட்டதால், மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மாலை, 6:00 மணிக்கு மழை விட்ட பின்னும், மின் வினியோகம் துவங்கவில்லை.
மின்வாரிய ஊழியர்கள் இரண்டு மணி நேர தேடலுக்கு பின், கோம்பைக்காடு பகுதியில் மின்சார ஒயர் அறுந்து கிடந்ததை கண்டுபிடித்தனர். அதன் பின், சீரமைப்பு பணிகள் மேற்கொண்டனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு மீண்டும் மின்சாரம் வந்தது. இரவு முழுவதும் மின்சாரம் இல்லாததால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு
ஆளாகினர்.