/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வேறு பகுதிக்கு குடிநீர் எடுக்க எதிர்ப்பு பி.டி.ஓ.,வை முற்றுகையிட்ட மக்கள் வேறு பகுதிக்கு குடிநீர் எடுக்க எதிர்ப்பு பி.டி.ஓ.,வை முற்றுகையிட்ட மக்கள்
வேறு பகுதிக்கு குடிநீர் எடுக்க எதிர்ப்பு பி.டி.ஓ.,வை முற்றுகையிட்ட மக்கள்
வேறு பகுதிக்கு குடிநீர் எடுக்க எதிர்ப்பு பி.டி.ஓ.,வை முற்றுகையிட்ட மக்கள்
வேறு பகுதிக்கு குடிநீர் எடுக்க எதிர்ப்பு பி.டி.ஓ.,வை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : மே 30, 2025 01:27 AM
இடைப்பாடி :கொங்கணாபுரம், கோரணம்பட்டி ஊராட்சி குத்தகைக்காட்டில், 10,000 லிட்டர் கொள்ளளவில், மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. அதன்மூலம் குத்தகைக்காடு, கோவாகவுண்டன்வளவு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் கோரணம்பட்டிக்கு குடிநீர் இல்லை எனக்கூறி, குத்தகைக்காடு தொட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல, பி.டி.ஓ., செந்தில்குமார்(கி.ஊ.,) நேற்று பொக்லைன் மூலம், குழாய் பதிக்க நடவடிக்கை மேற்கொண்டார். அதற்கு குத்தகைக்காடு, கோவாகவுண்டன்வளவு மக்கள், பி.டி.ஓ.,வை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பின் அத்தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்க மாட்டோம் எனக்கூறி, பி.டி.ஓ., திரும்பினார்.