போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்ட மக்கள்
ADDED : ஜூலை 09, 2024 06:13 AM
மகுடஞ்சாவடி : தொழிலதிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனை மக்கள் முற்றுகையிட்டனர்.
இளம்பிள்ளை அருகே நடுவனேரி, காட்டூரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 51, ஜவுளி தொழில் செய்து வருகிறார். கடந்த, 6-ம் தேதி இரவு, 7:00 மணிளவில் இவர், தனது காரில் பெருமாகவுண்டம்பட்டிக்கு வந்தபோது, அப்பகுதியில் மோட்டார் பைக்கில் வந்த ஒருவர் கீழே விழுந்தார். சுந்தரமூர்த்தி கார் மோதியதாக எண்ணி, அப்பகுதியில் இருந்த இளம்பிள்ளையை சேர்ந்த ஜெயக்குமார், 41, அவருடன் இருந்த சிலர் சேர்ந்து, சுந்தரமூர்த்தி காரை நிறுத்தி அவரை தாக்கியுள்ளனர். காயமடைந்த சுந்தரமூர்த்தி சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து அவரது உறவினர்கள் நேற்று, மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, சுந்தரமூர்த்தியை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்றனர். சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.