/உள்ளூர் செய்திகள்/சேலம்/விமான நிலையம் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: 4 கிராம மக்கள் கலெக்டரை சந்திக்க முடிவுவிமான நிலையம் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: 4 கிராம மக்கள் கலெக்டரை சந்திக்க முடிவு
விமான நிலையம் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: 4 கிராம மக்கள் கலெக்டரை சந்திக்க முடிவு
விமான நிலையம் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: 4 கிராம மக்கள் கலெக்டரை சந்திக்க முடிவு
விமான நிலையம் விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு: 4 கிராம மக்கள் கலெக்டரை சந்திக்க முடிவு
ADDED : பிப் 06, 2024 09:47 AM
ஓமலுார்: விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து, நான்கு கிராம மக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
ஓமலுார் அருகே காமலாபுரத்தில் உள்ள சேலம் விமான நிலையம், 128 ஏக்கரில் செயல்படுகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின் ஆகிய நகரங்களுக்கு, பயணிகள் விமான சேவை நடந்து வருகிறது. இரவில் விமானங்களை இயக்கும் வகையில், விமான ஓடுதளம் விரிவாக்க பணிக்காக, அருகில் உள்ள சிக்கனம்பட்டி, தும்பிப்பாடி, பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய நான்கு கிராமங்களில், 571 ஏக்கர் நிலம் கையகப்படுத்த, 2017ல் பணிகள் துவக்கப்பட்டது. இதற்கு நான்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, பல கட்ட போராட்டங்களை நடத்தினர்.
ஆனால், அரசு சார்பில் இரண்டு நில எடுப்பு தாசில்தார்களை தனியாக நியமித்து, முதற்கட்டமாக அரசு புறம்போக்கு நிலங்கள் குறித்து ஆய்வு செய்து, அதில் உள்ள வீடுகள், நஞ்சை, புஞ்சை கணக்கீடு அதன் விபரத்தை அரசு அனுப்பி, விமான போக்குவரத்து துறைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக விமான விரிவாக்கத்துக்கு, நிலம் அளவீடு பணியை அதிகாரிகள் துவக்கி தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் இரவு, தும்பிப்பாடி மாரியம்மன் கோவிலில், அப்பகுதி மக்கள் சிக்கனம்பட்டி, பொட்டிபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களில், கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்கள், விவசாயிகள் என நான்கு கிராம மக்கள், போராட்டம் குறித்தும், அதிகாரிகளை சந்திப்பது குறித்தும் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட நான்கு கிராம மக்கள் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் கூறுகையில்,''புதிதாக விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு பதிலாக, சேலம் சிட்டியை ஒட்டியுள்ள மேக்னசைட் நிலத்தை அரசு தேர்வு செய்து புதிய விமான நிலையத்தை அமைக்கலாம். அல்லது விமான நிலையம் அருகே உள்ள நிலத்தை கையகப்படுத்துவதற்கு, சந்தை மதிப்பான மூன்று கோடி ரூபாயை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும். இது குறித்து கலெக்டரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம்,'' என்றார்.