ADDED : ஜூலை 11, 2024 12:55 AM
ஓமலுார்: ஓமலுாரில் பெடரல் வங்கியின், 30வது கிளையை, எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.வர்த்தகம், தொழில்துறை வளர்ச்சி பெற, பெடரல் வங்கி முக்கிய பங்காற்றி வருகிறது.
சேலம் மண்டல அளவில் ஏற்கனவே, 29 கிளைகள் சிறப்பான சேவையாற்றி வரும் நிலையில், 30வது கிளை வங்கியாக, ஓமலுார் டி.எஸ்.பி., அலுவலகம் அருகே உள்ள கட்டடத்தில் தொடங்கப்பட்டது. அந்த கிளை வங்கி திறப்பு விழா நேற்று நடந்தது. பெடரல் வங்கி நிர்வாக இயக்குனர் ஷாலினிவாரியர் தலைமை வகித்தார். அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, குத்-துவிளக்கேற்றி வங்கியை திறந்து வைத்தார். தொடர்ந்து சேலம் டி.பி.எஸ்., நிறுவன நிர்வாக இயக்குனர் சேகர், வங்கியின், 'லாக்கர்' அறையை, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஜோதி குழும சேர்மன் ஜோதிபாசு, ஏ.டி.எம்., அறையை திறந்து வைத்தார். இதில் வங்கியின் சேலம் மண்டல தலைவர் ஜிதேஷ், மண்டல துணைத்தலைவர் ஆனந்த்கிருஷ்ணன், கிளை மேலாளர் ராஜேஸ்-வரி, வங்கி அலுவலர்கள், பணியாளர்கள், மக்கள் பங்கேற்றனர்.