/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் பலி ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் பலி
ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் பலி
ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் பலி
ஓடும் ரயிலில் இருந்து விழுந்து வடமாநில வாலிபர் பலி
ADDED : செப் 15, 2025 12:57 AM
சேலம்:சேலம் மாவட்டம் லோகூர் - டேனிஷ்பேட்டை ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே, 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம், நேற்று முன்தினம் காலை கிடந்தது. இதை அறிந்து, அங்கு சென்ற சேலம் ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தலையில் படுகாயம், முகம், கை, கால்களில் சிராய்ப்பும் ஏற்பட்டு, வாலிபர் இறந்து கிடந்தார். ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து அடிபட்டு இறந்திருக்க கூடும்.
அவர், வட மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம். எந்த ஊர், பெயர் குறித்து விசாரிக்கிறாம். இறந்தவர் குறித்து யாருக்கும் தகவல் தெரிந்தால், ரயில்வே போலீசாருக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.