/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அலட்சிய இன்ஸ்பெக்டர் 2வது முறை இடமாற்றம் அலட்சிய இன்ஸ்பெக்டர் 2வது முறை இடமாற்றம்
அலட்சிய இன்ஸ்பெக்டர் 2வது முறை இடமாற்றம்
அலட்சிய இன்ஸ்பெக்டர் 2வது முறை இடமாற்றம்
அலட்சிய இன்ஸ்பெக்டர் 2வது முறை இடமாற்றம்
ADDED : செப் 05, 2025 01:16 AM
சேலம்:சேலம் மாவட்டம், ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் வாசுகி. இவர், சில நாட்களுக்கு முன், முதியவர் கொடுத்த புகார் மனுவை விசாரிக்காமல் அலைக் கழித்ததாக புகார் எழுந்தது.
தொடர்ந்து, அந்த முதியவர், சேலம் எஸ்.பி., கவுதம் கோயலை சந்தித்து புகார் தெரிவித்தார்.
எஸ்.பி., வாசுகியிடம் விளக்கம் கேட்டார். அதை தொடர்ந்து, அவரை சேலம் ஆயுதப்படைக்கு இடமாற்றி, எஸ்.பி., நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
ஏற்கனவே இதுபோன்று புகார் மனுக்களை முறையாக விசாரிக்காமல் அலட்சியமாக இருந்த புகாரில், வாசுகி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். தற்போது இரண்டாவது முறையாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.