/உள்ளூர் செய்திகள்/சேலம்/கொங்கணாபுரம் அருகே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் தொடக்கம்கொங்கணாபுரம் அருகே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் தொடக்கம்
கொங்கணாபுரம் அருகே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் தொடக்கம்
கொங்கணாபுரம் அருகே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் தொடக்கம்
கொங்கணாபுரம் அருகே இயற்கை எரிவாயு குழாய் திட்டம் தொடக்கம்
ADDED : ஜன 03, 2024 11:17 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, வெட்டுக்காடு பகுதியில் மத்திய அரசின் கெயில் நிறுவனம் சார்பில், தென் மண்டல செயல் இயக்குனர் மோவர் தலைமையில், கிருஷ்ணகிரியில் இருந்து கோவை வரை, 2,187 கோடி ரூபாய் திட்ட மதிப்பில், 294 கி.மீ., துாரத்திற்கு இயற்கை எரிவாயு குழாய் வழியாக செல்லும் திட்டப்பணியை, பிரதமர் மோடி காணொலி வாயிலாக நேற்று துவக்கி வைத்தார்.
சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட ஒன்ப மாவட்ட மக்கள் பயன்படும் வகையில், 294 கி.மீ., துாரத்திற்கு குடிநீருக்கு இணையாக, 59 லட்சம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு இயற்கை எரிவாயு பங்கை, 6.7 சதவீதத்தில் இருந்து, 15 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. கிருஷ்ணகிரி முதல் கோவை வரையிலான குழாய் தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்கள் வழியாக சென்று, தமிழகத்தின் தேசிய எரிவாயு கட்டமைப்புடன் இணையும். இதன் மூலம் உரம், பெட்ரோ கெமிக்கல் துறையில் வேலைவாய்ப்பு உருவாகும். மேலும் இந்த வழித்தடத்தில் தொழிற்சாலைகள், வாகனங்களுக்கான சி.என்.ஜி., மற்றும் குடியிருப்புகளுக்கான இயற்கை எரிவாயு வழங்கப்படும். இதன் மூலம் கரியமில வாயுவை குறைப்பதற்கும், இயற்கை எரிவாயு தடையின்றி கிடைக்கவும் பங்களிக்கும்.