/உள்ளூர் செய்திகள்/சேலம்/விளக்குகளை பராமரிக்க 10 ஆண்டு ஒப்பந்தம்; ரத்து செய்ய நகராட்சி கவுன்சிலர் வலியுறுத்தல்விளக்குகளை பராமரிக்க 10 ஆண்டு ஒப்பந்தம்; ரத்து செய்ய நகராட்சி கவுன்சிலர் வலியுறுத்தல்
விளக்குகளை பராமரிக்க 10 ஆண்டு ஒப்பந்தம்; ரத்து செய்ய நகராட்சி கவுன்சிலர் வலியுறுத்தல்
விளக்குகளை பராமரிக்க 10 ஆண்டு ஒப்பந்தம்; ரத்து செய்ய நகராட்சி கவுன்சிலர் வலியுறுத்தல்
விளக்குகளை பராமரிக்க 10 ஆண்டு ஒப்பந்தம்; ரத்து செய்ய நகராட்சி கவுன்சிலர் வலியுறுத்தல்
ADDED : மே 31, 2025 06:14 AM
மேட்டூர்: ''தெரு விளக்குகளை பராமரிக்க, 10 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் விளக்குகள் இல்லை. பராமரிப்பும் சரியில்லை. அந்த ஒப்பந்ததை ரத்து செய்து நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும்,'' என, தி.மு.க., கவுன்சிலர் செல்வன் வலியுறுத்தினார்.
மேட்டூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, தலைவி சந்திரா தலைமை வகித்தார். அதில் நடந்த விவாதம்:
வி.சி., மாரியம்மாள்(29வது வார்டு): குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. என் வீட்டுக்கே தண்ணீர் வருவதில்லை. அலுவலர்களிடம் கூறியும் பலனில்லை. எப்படி ஓட்டு கேட்பது? நடவடிக்கை எடுக்காவிட்டால், கட்சி சார்பில் மேட்டூர், 4 ரோட்டில் மறியலில் ஈடுபடுவோம்.தி.மு.க., இளங்கோ(2வது வார்டு): ஒப்பந்ததாரர், மேல்நிலை தொட்டியில் முறையாக குடிநீர் நிரப்புவதில்லை. இதனால் மேல்குள்ளவீரன்பட்டிக்கு சரியாக குடிநீர் செல்வதில்லை. அவருக்கு வழங்க திட்டமிட்டுள்ள குடிநீர் வினியோக ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.தி.மு.க., இளம்பரிதி(3வது வார்டு): தமிழகம் முழுதும் காலனி என்ற பெயரை அகற்ற, முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கேற்ப ஆஸ்பத்திரி காலனி பெயரை மாற்ற வேண்டும். வார்டில், 3 வீதிகளில் மழைநீர் வடிகால் சேதமடைந்து தார்ச்சாலை சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும்.தி.மு.க., செல்வன்(8வது வார்டு): வீதிகளில் தெருவிளக்குகளை பராமரிக்க, 10 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் விளக்குகள் இல்லை. பராமரிப்பும் சரியில்லை. அந்த ஒப்பந்ததை ரத்து செய்து நகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டும். அதற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்து கடிதம் தர முடிவு செய்துள்ளோம். கடிதத்தை பெற்று, ஒப்பந்தத்தை ரத்து செய்ய, கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷனர் நித்யா: முறையாக கடிதம் கொடுத்தால் அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.இக்கூட்டத்துக்கு, அ.தி.மு.க.,வை சேர்ந்த, 5 கவுன்சிலர்கள், தி.மு.க.,வை சேர்ந்த, 10 கவுன்சிலர்கள் வரவில்லை.