Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/சேலத்தில் இன்று காலைக்கதிர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி

சேலத்தில் இன்று காலைக்கதிர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி

சேலத்தில் இன்று காலைக்கதிர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி

சேலத்தில் இன்று காலைக்கதிர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி

ADDED : ஜூலை 21, 2024 11:04 AM


Google News
சேலத்தில் இன்று காலைக்கதிர் இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி நிகழ்ச்சி, சேலம் ஏ.வி.ஆர்., ரவுண்டானாவில் உள்ள சி.ஜெ.பிளாசியோ ஓட்டலில் இன்று காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்க உள்ளது. சேலம் அரசு இன்ஜினியரிங் கல்லுாரி உதவி பேராசிரியர்கள் ஆனந்தவேல், சக்திவேல், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடைமுறை குறித்து விளக்குகின்றனர்.

கல்வி ஆலோசகர் அஸ்வின், வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பிரிவுகள் குறித்து பேசுகிறார். இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர், பெற்றோர் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.

'சந்தேகம் பறந்தது: தெளிவு பிறந்தது'

ஐடியா கிடைத்தது

நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. கவுன்சிலிங் குறித்த ஐடியா கிடைத்தது. நிகழ்ச்சி தெளிவாக இருந்தது. வாய்ப்புகள் குறித்தும், என்ன படிக்கலாம் என்பது குறித்தும் தெளிவான விளக்கம் கிடைத்தது.

- எல்.மைதிலி, சென்னிமலை.

தெளிவு பெற்றேன்

கவுன்சிலிங் நிகழ்ச்சிக்கு முன்னதாக, என்ன படிக்கலாம். எந்த கல்லுாரியில் படிக்கலாம் என தெரியாமல் இருந்தது. எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்று கூட தெரியாமல் இருந்தேன். நிகழ்ச்சிக்கு வந்த பின் எந்த கல்லுாரியில், எந்த பாடப்பிரிவை படிக்க வேண்டும் என தெரிந்து கொண்டேன்.

-டி.மிதுன், ஈரோடு.

விளக்கிய விதம் அருமை

நிகழ்ச்சியில் கவுன்சிலிங் குறித்தும், எந்த கல்லுாரியில் என்ன படிக்கலாம் என்பது பற்றி தெளிவாக விளக்கினர். மேடையில் கவுன்சிலிங் குறித்து பேசிய அனைவருமே தெளிவான விளக்கத்தை அளித்தனர். கட்-ஆப் மார்க் குறித்தும், எந்த கல்லுாரியை தேர்வு செய்யலாம் என்பது குறித்தும் தெளிவாக விளக்கமளித்தனர்.கே.எஸ்.ஆறுமுகராஜன், கோபி.

காலைக்கதிருக்கு நன்றி நிகழ்ச்சி அருமையாக இருந்தது.100 சதவீதம் திருப்தி கிடைத்தது. எதுவும் தெரியாமல் வந்தோம். பல சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைத்தது. நிகழ்ச்சி ஏற்பாடுசெய்த காலைக்கதிருக்கு நன்றி. --ஏ.ஜி.டி.சக்திதேவி, குன்னத்துார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us