/உள்ளூர் செய்திகள்/சேலம்/மீண்டும் மோடியே பிரதமர்: சேலத்தில் தினகரன் ஆருடம்மீண்டும் மோடியே பிரதமர்: சேலத்தில் தினகரன் ஆருடம்
மீண்டும் மோடியே பிரதமர்: சேலத்தில் தினகரன் ஆருடம்
மீண்டும் மோடியே பிரதமர்: சேலத்தில் தினகரன் ஆருடம்
மீண்டும் மோடியே பிரதமர்: சேலத்தில் தினகரன் ஆருடம்
ADDED : ஜன 29, 2024 10:58 AM
சேலம்: ''ஊழல் இல்லாத ஆட்சியாக மத்திய அரசு செயல்படுவதால், தொடர்ந்து ஆட்சிக்கு வரும் என, பெரும்பான்மை மக்களின் எண்ணமாக உள்ளது. மக்கள் நினைத்தால் மீண்டும் மோடி தான் பிரதமர்,'' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் தெரிவித்தார்.
சேலத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட அ.ம.மு.க., தொகுதி பொறுப்பாளர்கள், செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற பின், அக்கட்சி பொதுச்செயலர் தினகரன் கூறியதாவது:
சேலம் மாநாட்டில், 'இண்டியா' கூட்டணி வெற்றிபெறும் என பேசிவிட்டு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வீடு திரும்புவதற்குள், அந்த கூட்டணி சுக்குநுாறாக உடைந்து விட்டது. கடைசியில் அவர் மட்டுமே கூட்டணியில் மிஞ்சுவார் என கருதுகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின், முறையாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்டது. கடவுளை நம்புகிறவர்கள், இறை பக்தி கொண்டவர்கள் அனைவரும் அதை ஏற்றுக்கொள்வார்கள். தமிழகத்தில் எம்.பி., தேர்தல் முடிவை அது வெளிப்படுத்தும்.
ஊழல் இல்லாத ஆட்சியாக மத்திய அரசு செயல்படுவதால் தொடர்ந்து ஆட்சிக்கு வரும் என, பெரும்பான்மை மக்களின் எண்ணமாக உள்ளது. மக்கள் நினைத்தால் மீண்டும் மோடி தான் பிரதமர். பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் இடம்பெறும்படி, கூட்டணி பேச்சு நடந்து வருகிறது.
துரோகம், ஏமாற்று வேலை மட்டுமே பழனிசாமிக்கு தெரிந்த அரசியல். இனியும் அவர், இரட்டை இலை சின்னத்தை காட்டி ஏமாற்ற முடியாது. வரும் தேர்தலில் மக்கள் அதை உணர்த்தி விடுவார்கள். கோடநாடு கொலை; கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.