மேம்பாலம் அமைக்க எம்.எல்.ஏ., ஆய்வு
மேம்பாலம் அமைக்க எம்.எல்.ஏ., ஆய்வு
மேம்பாலம் அமைக்க எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூன் 11, 2025 02:36 AM
ஆத்துார், ஆத்துார் அருகே, அம்மம்பாளையம், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. அங்கு, அரசு, தனியார் பள்ளிகள், வங்கி உள்ளிட்டவை உள்ளன. அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டதால், மேம்பாலம் கட்டக்கோரி மக்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், நேற்று அம்மம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது மக்கள், தன்னார்வ அமைப்பினர், விவசாய சங்கத்தினர், எம்.எல்.ஏ.,விடம் பாலம் அமைப்பது தொடர்பாக வலியுறுத்தி, மனுக்கள் வழங்கினர். அவர்களிடம், 'அம்மம்பாளையம், கொத்தாம்பாடியில் புதிதாக மேம்பாலம் அமைக்க, மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்படும்' என்றார்.