/உள்ளூர் செய்திகள்/சேலம்/முதல் திருப்பத்தேர்வில் குளறுபடி: மாணவர், ஆசிரியர் அதிருப்திமுதல் திருப்பத்தேர்வில் குளறுபடி: மாணவர், ஆசிரியர் அதிருப்தி
முதல் திருப்பத்தேர்வில் குளறுபடி: மாணவர், ஆசிரியர் அதிருப்தி
முதல் திருப்பத்தேர்வில் குளறுபடி: மாணவர், ஆசிரியர் அதிருப்தி
முதல் திருப்பத்தேர்வில் குளறுபடி: மாணவர், ஆசிரியர் அதிருப்தி
ADDED : ஜூலை 09, 2024 06:21 AM
சேலம்: ஆத்துார் பகுதியில் நேற்று நடந்த முதல் திருப்பத்தேர்வில், வினாத்தாள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டதால், மாணவர்கள், ஆசிரியர்கள் அதிருப்திக்குள்ளாகினர்.
சேலம் மாவட்டத்தில், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு, முதல் திருப்பத்தேர்வு நேற்று தொடங்கியது. இதற்கான வினாத்தாள்கள், மையப்பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பள்ளி வாரியாக பிரித்து வழங்கப்பட்டது. இதில், ஆத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து நேற்று, 20க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இதில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில் குளறுபடி நடந்துள்ளது. காலையில் தமிழ் தேர்வும், மதியம் அறிவியல் பாடங்களுக்கான தேர்வும் நடத்தப்பட்டது.
இதில், மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளுக்கு, குறைந்த வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இதனால், பள்ளியில் வினாத்தாள்களை ஜெராக்ஸ் எடுத்து, மாணவ, மாணவியருக்கு வழங்கினர். தேர்வில் நடந்த குளறுபடியால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிருப்திக்குள்ளாகினர்.