/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மனநலம் பாதிக்கப்பட்டவர் ஓடையில் மூழ்கி பலி மனநலம் பாதிக்கப்பட்டவர் ஓடையில் மூழ்கி பலி
மனநலம் பாதிக்கப்பட்டவர் ஓடையில் மூழ்கி பலி
மனநலம் பாதிக்கப்பட்டவர் ஓடையில் மூழ்கி பலி
மனநலம் பாதிக்கப்பட்டவர் ஓடையில் மூழ்கி பலி
ADDED : செப் 04, 2025 01:35 AM
தாரமங்கலம், தாரமங்கலம் அருகே அணைமேட்டை சேர்ந்தவர் அண்ணாமலை, 38. இவருக்கு அடிக்கடி வலிப்பு வருவதோடு, சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். தெருவில் பழைய பாட்டில்களை எடுத்து விற்று வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியேறிய அவர், இரவு திரும்பி வரவில்லை.
இந்நிலையில் அணைமேடு ஓடையில் மூழ்கி, அவர் இறந்து கிடப்பதாக நேற்று தகவல் கிடைக்க, அவரது குடும்பத்தினர் சென்று பார்த்தனர். அவர் பாட்டில் எடுக்க இறங்கியபோது வலிப்பால் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என, அவரது தந்தை ஏழுமலை தெரிவித்தார். இதுகுறித்து தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.