/உள்ளூர் செய்திகள்/சேலம்/ குளிர்பானம் என நினைத்து 'டிஞ்சர்' குடித்தவர் சாவு குளிர்பானம் என நினைத்து 'டிஞ்சர்' குடித்தவர் சாவு
குளிர்பானம் என நினைத்து 'டிஞ்சர்' குடித்தவர் சாவு
குளிர்பானம் என நினைத்து 'டிஞ்சர்' குடித்தவர் சாவு
குளிர்பானம் என நினைத்து 'டிஞ்சர்' குடித்தவர் சாவு
ADDED : ஜூன் 08, 2025 01:10 AM
தலைவாசல், தலைவாசல் அருகே நாவக்குறிச்சி, வடக்குத்தெருவை சேர்ந்த, கூலித்தொழிலாளி சோலைமுத்து, 51. இவர், 4 நாட்களுக்கு முன், வீட்டில், '7 அப்' பாட்டிலில் வைத்திருந்த, டிஞ்சரை(காயத்தை சுத்தப்படுத்த பயன்படுத்தும் மருந்து) குளிர்பானம் என நினைத்து குடித்துள்ளார். வயிறு பகுதியில் எரிச்சல் ஏற்பட்ட பின், டிஞ்சர் குடித்தது தெரியவர, தலைவாசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
ஆனால் நேற்று முன்தினம், வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால், ஆத்துாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு நேற்று கொண்டு வந்தபோது அவர் உயிரிழந்தார். இதுகுறித்து சோலைமுத்து மனைவி புஷ்பா புகார்படி தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.