Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/அழகு நிலையத்தில் புகுந்து சங்கிலி பறிக்க முயன்றவர் கைது

அழகு நிலையத்தில் புகுந்து சங்கிலி பறிக்க முயன்றவர் கைது

அழகு நிலையத்தில் புகுந்து சங்கிலி பறிக்க முயன்றவர் கைது

அழகு நிலையத்தில் புகுந்து சங்கிலி பறிக்க முயன்றவர் கைது

ADDED : மே 16, 2025 01:31 AM


Google News
இடைப்பாடி, இடைப்பாடி, வெள்ளாண்டிவலசு, காமராஜ் நகரை சேர்ந்த, உதயகுமார் மனைவி திலகவதி, 50. அருகே, சேலம் பிரதான சாலையில், சக்தி தியேட்டர் எதிரே பியூட்டி பார்லர் நடத்துகிறார். அங்கு நேற்று மதியம், 2:00 மணிக்கு ஹெல்மெட் அணிந்து வந்த ஒருவர், அதை கழற்றாமலே, அங்கிருந்த கவரிங் நகையை விலைக்கு வாங்கினார்.

அதற்கான பணத்தை திலகவதியிடம் கொடுத்து மீதி பணம் கேட்டார். அவரும் மீதி பணத்தை எடுத்து திரும்பும்போது, அந்த நபர், திலகவதி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவர் அணிந்திருந்த, தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். திலகவதி கூச்சலிட, அருகில் இருந்தவர்கள் கடைக்குள் வந்து, அந்த நபரை பிடித்து இடைப்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர், திலகவதி வீட்டுக்கு அடுத்த தெருவில் உள்ள அண்ணா நகரை சேர்ந்த செந்தில்குமார், 50, என்பதும், மெடிக்கல் கடை வைத்துள்ளதும் தெரிந்தது. பின் அவரை, போலீசார் கைது செய்தனர். அவரது ஹெல்மெட், அவர் ஓட்டி வந்த யமஹா பைக்கையும் பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us