/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பைக்கில் மதுபாட்டில் வைத்து விற்றவர் கைது பைக்கில் மதுபாட்டில் வைத்து விற்றவர் கைது
பைக்கில் மதுபாட்டில் வைத்து விற்றவர் கைது
பைக்கில் மதுபாட்டில் வைத்து விற்றவர் கைது
பைக்கில் மதுபாட்டில் வைத்து விற்றவர் கைது
ADDED : ஜூன் 02, 2025 06:42 AM
சேலம்: சேலம், கருப்பூர் போலீசார், நேற்று முன்தினம் டால்மியா போர்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, 'பல்சர்' பைக்கில் மதுபாட்டில்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, கருப்பூர், உப்பு கிணறு பகுதியை சேர்ந்த வடிவேல், 34, என தெரிந்தது. அவரது பையில் இருந்த, 60 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார், வடிவேலை கைது செய்தனர். டாஸ்மாக் கடையில் மொத்தமாக வாங்கி சட்ட விரோதமாக மதுவை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றது தெரிந்தது.பெண் சிக்கினார்
கெங்கவல்லி போலீசார் நேற்று, 74.கிருஷ்ணாபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வீட்டில் மதுபாட்டில் வைத்து விற்பனையில் ஈடுபட்ட, மேகநாதன் மனைவி லதா, 35, என்பவரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம், 20 பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.