/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பராமரிப்பு இல்லாத தாசில்தார் குடியிருப்பு பராமரிப்பு இல்லாத தாசில்தார் குடியிருப்பு
பராமரிப்பு இல்லாத தாசில்தார் குடியிருப்பு
பராமரிப்பு இல்லாத தாசில்தார் குடியிருப்பு
பராமரிப்பு இல்லாத தாசில்தார் குடியிருப்பு
ADDED : ஜூன் 26, 2025 02:01 AM
ஓமலுார், சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாசில்தார் அலுவலகம் மற்றும் தாசில்தார் குடியிருப்பு வளாகம், 2.61 கோடி ரூபாயில் கட்டப்பட்டு, 2016 பிப்., 27ல் திறக்கப்பட்டது. சில தாசில்தார்கள், அந்த குடியிருப்பு வளாகத்தை, அவசர காலத்தில் பயன்படுத்தினர். கடந்த, 3 மாதங்களுக்கு மேலாக, அக்கட்டடம் பராமரிப்பின்றி பூட்டப்பட்டுள்ளது.
மண் கடத்தலுக்கு பயன்படுத்தியதால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், அந்த குடியிருப்பை ஒட்டி நிறுத்தப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட மண், ஆங்காங்கே குவிக்கப்பட்டுள்ளது. செடி கொடிகள் முளைத்து புதர் மண்டியும் உள்ளது. இதேநிலை நீடித்தால், குடியிருப்பு கட்டடம் வீணாகும் சூழல் ஏற்படும். அதனால் அரசு கட்டடத்தை முறையாக பராமரிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.