Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/அடிக்கடி மின் தடையால் பழுதாகும் தறி; தி.மு.க.,-- எம்.பி.,யிடம் மக்கள் குமுறல்

அடிக்கடி மின் தடையால் பழுதாகும் தறி; தி.மு.க.,-- எம்.பி.,யிடம் மக்கள் குமுறல்

அடிக்கடி மின் தடையால் பழுதாகும் தறி; தி.மு.க.,-- எம்.பி.,யிடம் மக்கள் குமுறல்

அடிக்கடி மின் தடையால் பழுதாகும் தறி; தி.மு.க.,-- எம்.பி.,யிடம் மக்கள் குமுறல்

ADDED : ஜூலை 15, 2024 11:54 PM


Google News
பனமரத்துப்பட்டி: 'அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், தறி உற்பத்தி குறைந்து வாழ்-வாதாரம் பாதிக்கிறது' என, பாதிக்கப்பட்ட மக்கள் எம்.பி., செல்-வகணபதியிடம் முறையிட்டனர்.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், நிலவாரப்பட்டி ஊராட்சியில், கொசு வலை மற்றும் விசைத்தறி தொழிலை நம்பி, ஏராளமான குடும்பத்தினர் உள்ளனர். அங்கு, தாசநாயக்கன்பட்-டியில் உள்ள மின்சார வாரியம் மூலம் மின் வினியோகம் செய்-யப்படுகிறது. சேலம் தி.மு.க.,-எம்.பி.,செல்வகணபதி, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க நிலவாரப்பட்டி சென்றார். அவரிடம், 'நாள்தோறும் இரவு, பகல் பாராமல் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுகிறது.

கொசு-வலை தறி மற்றும் விசைத்தறி பழுது ஏற்பட்டு, உற்பத்தி குறைந்து, வாழ்வாதாரம் பாதிக்கிறது. அறிவிக்கப்படாத மின் தடையால், தறி தொழில் நலிவடைந்து வருகிறது. பள்ளி, கல்-லுாரி மாணவ, மாணவிகள் படிக்கும் சமயத்தில், மின் வெட்டு ஏற்படுவதால், மிகவும் சிரமம்படுகிறோம். தடையின்றி மின்சாரம் வினியோகிக்க வேண்டும்' என்றனர்.மேலும் இது குறித்து, எம்.பி.,யிடம் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us