/உள்ளூர் செய்திகள்/சேலம்/ புது கழிப்பிடங்களுக்கு பூட்டு: மாணவர்கள் அவதி புது கழிப்பிடங்களுக்கு பூட்டு: மாணவர்கள் அவதி
புது கழிப்பிடங்களுக்கு பூட்டு: மாணவர்கள் அவதி
புது கழிப்பிடங்களுக்கு பூட்டு: மாணவர்கள் அவதி
புது கழிப்பிடங்களுக்கு பூட்டு: மாணவர்கள் அவதி
ADDED : ஜூன் 26, 2025 02:17 AM
பனமரத்துப்பட்டி, மல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு மாணவர்களுக்கு கழிப்பிடம் உள்ளது. அதிலுள்ள, 6 கழிப்பறை கதவுகளும் உடைந்ததால், அவசரத்துக்கு பயன்படுத்த முடியாமல் மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
இந்நிலையில், 36 லட்சம் ரூபாய் மதிப்பில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே, இரு இடங்களில் நவீன கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் அப்பணி முடிந்து, 6 மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், இயற்கை உபாதைக்கு, போதிய பராமரிப்பற்ற பழைய கழிப்பறையை பயன்படுத்தும் அவலம் தொடர்கிறது. அதேபோல் பழைய ஓட்டு வகுப்பறை கட்டடம் அருகே மாணவியருக்கு புதியதாக கட்டிய கழிப்பிடமும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மாணவியரும், பழைய கழிப்பிடத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால் புது கழிப்பிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, மாணவர்களின் பெற்றோர் வலியுறுத்தினர்.