வடகாடு சாலையில் விளக்கு வசதி தேவை
வடகாடு சாலையில் விளக்கு வசதி தேவை
வடகாடு சாலையில் விளக்கு வசதி தேவை
ADDED : ஜூன் 25, 2025 01:52 AM
பனமரத்துப்பட்டி, மல்லுார் டவுன் பஞ்சாயத்து வளம் மீட்பு பூங்காவில் இருந்து, வடகாடு வழியே சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில் இணையும் சாலை உள்ளது. அது மல்லுார் - பனமரத்துப்பட்டியை இணைக்கும் சாலையாக உள்ளதால், போக்குவரத்து அதிகம் உள்ளது.
அச்சாலையில் தெருவிளக்கு இல்லாததால், இரவில் இருள் சூழ்ந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்கின்றனர். சாலையோர விவசாய நிலத்தில் பள்ளம் இருப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. அதனால் அச்சாலையில் தெருவிளக்கு அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.