Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'வேலை பற்றிக்கொண்டால் வாழ்க்கை எப்போதும் சிறக்கும்'

'வேலை பற்றிக்கொண்டால் வாழ்க்கை எப்போதும் சிறக்கும்'

'வேலை பற்றிக்கொண்டால் வாழ்க்கை எப்போதும் சிறக்கும்'

'வேலை பற்றிக்கொண்டால் வாழ்க்கை எப்போதும் சிறக்கும்'

ADDED : மார் 17, 2025 03:49 AM


Google News
சேலம்: சேலம், மல்லமூப்பம்பட்டியில், 'வாழ்வை மாற்றும் வேல்மாறல்' எனும் திருப்புகழ் வழிபாடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் வேலுக்கு, பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து முருகன் பாடல்கள் பாடப்பட்டு, வேலுக்கு தீபாரா-தனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள், பாராயணம் செய்து வேலை வழிபட்டனர்.

பின் ஆன்மிக பேச்சாளர் விஜயகுமார் பேசியதாவது: வேலுண்டு வினை இல்லை என்பது மனித வாழ்வில் உண்மை. எண்ணங்கள் முழுதும், முருகன் பாதத்தில் வைத்துவிட்டால் வாழ்க்கை மாறும். எப்படி எனில் நம் வாழ்வில் வீட்டில் வளர்க்கும் வெற்-றிலை கொடியாகட்டும், மணிப்பளான்ட் செடியாகட்டும், அது வளர்வதற்கு ஒரு ஊன்று கோல் முக்கியம். அப்போதுதான் அச்-செடி ஊன்றுகோலை பிடித்து நன்கு வளர ஆரம்பிக்கும். ஊன்-றுகோல் இல்லை என்றால் அதன் வளர்ச்சி இல்லாமல் போய்-விடும்.அதுபோல மனித வாழ்வில் ஒரு பிடிப்பு இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. எல்லாம் இருந்தும் எதற்காக வாழ்கிறோம் என தெரியாமல் கவலையுடன் வாழும் மனிதர்கள் அதிகம். அதனால் செடிக்கு எப்படி ஒரு கோல் தேவையோ, அதேபோல் மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு கோல் தேவை. முருகனை நினைத்து வேண்டினால் அவர் மனம் உருகி ஒரு குச்சி தருவார். அதுதான் வேல். முருகவேல். வேலை பற்றிக்கொண்டால் வாழ்க்கை எப்போதும் சிறக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us