/உள்ளூர் செய்திகள்/சேலம்/சிறுத்தை நடமாட்டம்? மலை அடிவார மக்கள் பீதிசிறுத்தை நடமாட்டம்? மலை அடிவார மக்கள் பீதி
சிறுத்தை நடமாட்டம்? மலை அடிவார மக்கள் பீதி
சிறுத்தை நடமாட்டம்? மலை அடிவார மக்கள் பீதி
சிறுத்தை நடமாட்டம்? மலை அடிவார மக்கள் பீதி
ADDED : ஜன 31, 2024 03:36 PM
மேட்டூர் : சேலம் மாவட்டம் கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி கோம்பைக்காடு கிராமம், பாலமலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு, 50க்கு மேற்பட்ட மலைவாழ் இனத்தை சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர், விவசாயத்தை நம்பியே உள்ளனர். ஒரு மாதமாக அப்பகுதியில் சுற்றித்திரியும் மர்ம விலங்கு, அப்பகுதியில் மக்கள் வளர்க்கும் ஆடுகள், நாய்களை கொன்று விடுகின்றன. இதுவரை அப்பகுதியில், 10க்கும் மேற்பட்ட ஆடுகள், 6 நாய்கள் உயிரிழந்துள்ளன. நேற்று முன்தினம் விவசாயி செல்லப்பன் வீட்டில் புகுந்து நாயை பிடித்துச்சென்றது.
மலை அடிவாரத்தில் சுற்றித்திரியும் விலங்கு சிறுத்தை என, நேரில் பார்த்த கிராம மக்கள் கூறுகின்றனர். அப்பகுதியில் உள்ள குவாரியில் தேங்கி நிற்கும் நீரை குடித்து விட்டு அங்கேயே முகாமிட்டுள்ளதாகவும், அதை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். நேற்று மேட்டூர் வி.ஏ.ஓ., திருநாவுக்கரசு, அப்பகுதியில் பார்வையிட்டார். மேலும் வனத்துறையினர், ஒரு வாரத்துக்கு முன்பே, 2 இடங்களில் கேமரா பொருத்தினர். அதில் மர்ம விலங்கு நடமாட்டம் பதிவாகவில்லை.