/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அனுமதியின்றி அமைத்த மின்வேலி தொட்டதால் கூலித்தொழிலாளி பலி அனுமதியின்றி அமைத்த மின்வேலி தொட்டதால் கூலித்தொழிலாளி பலி
அனுமதியின்றி அமைத்த மின்வேலி தொட்டதால் கூலித்தொழிலாளி பலி
அனுமதியின்றி அமைத்த மின்வேலி தொட்டதால் கூலித்தொழிலாளி பலி
அனுமதியின்றி அமைத்த மின்வேலி தொட்டதால் கூலித்தொழிலாளி பலி
ADDED : மே 14, 2025 02:06 AM
சேலம் :ஏற்காடு, கொட்டச்சேடு அருகே நார்த்தன்சேட்டை சேர்ந்தவர் ராமன், 60. கூலித்தொழிலாளி. இவரது தம்பி அருணகிரி, சேலம், வீராணம் அருகே செங்காட்டூரில், 3 ஆண்டாக தங்கி, அப்பகுதியில் உள்ள பண்ணையில் பணியாற்றினார்.
சில நாட்களுக்கு முன் சேலம் வந்த ராமன், தம்பியுடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பக்கத்து காட்டை சேர்ந்த மற்றொரு ராமன், 65, என்பவரது தோட்டத்தில், நேற்று நார்த்தன்சேடு ராமன், வேலை செய்து கொண்டிருந்த நிலையில் இறந்துவிட்டார். மக்கள் தகவல்படி, வீராணம் போலீசார் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ராமன், அவரது காட்டில் குச்சி கிழங்கு பயிரிட்டு, காட்டுப்பன்றிகள் புகுந்துவிடுவதை தடுக்க, அனுமதியின்றி மின் வேலி அமைத்துள்ளார். இதை அறியாமல் நார்த்தன்சேடு ராமன், மின் கம்பியை தொட்டபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார். இதனால் தோட்டக்காரர் ராமனிடம் விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
'யர், பிளஸ் 2 பொதுச்தேர்வில், தொடர்ந்து, 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளி மாணவி பிரியதர்ஷினி, 589 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். காவ்யா, ரோஹித் ஆகியோர், 580 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பிடித்தனர். மாணவி சசிகா, 572 மதிப்பெண் பெற்று, 3ம் இடம் பிடித்தார். மாணவர்களின் சராசரி மதிப்பெண், 600க்கு, 481 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கணினி அறிவியல், கணினி பயன்பாடு, வணிகவியல் பாடங்களில் தலா ஒருவர், 100க்கு, 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 580 மதிப்பெண்களுக்கு மேல், 3 பேர், 570க்கு மேல், 5 பேர், 550க்கு மேல், 12 பேர், 500க்கு மேல், 45 பேர், 480க்கு மேல், 55 மாணவர்கள் பெற்றுள்ளதாக, தலைமை ஆசிரியை நீலவேணி தெரிவித்தார்.
தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை, பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர். மேலும், எல்.கே.ஜி., முதல், 9ம் வகுப்பு வரை ஆங்கில வழியிலும், பிளஸ் 1 வகுப்பில் தமிழ், ஆங்கில வழியிலும் சேர்க்கை
நடக்கிறது.


