/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிேஷகம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 08, 2025 01:12 AM
சேலம், சேலம், பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த, 5ல் தொடங்கியது. நேற்று, 3ம் கால யாகசாலை பூஜை, உற்சவர் திருமேனிகளுக்கு யாகத்தில் வைத்து பூஜித்த, 17 கலச புனிதநீரால் சிறப்பு திருமஞ்சனம், 4ம் கால யாகசாலை பூஜை, ஸயனாதிவாசம் ஆகியவை நடந்தன.
இன்று காலை, 6:00 மணிக்கு விஷ்வரூப தரிசனம், 5ம் கால யாகசாலை பூஜை, மகா பூர்ணாஹூதியுடன் நிறைவு பெறும். தொடர்ந்து, 7:30 மணிக்கு மேல், 8:30க்குள் கும்பாபிேஷகம் நடக்கிறது.
மாலையில் திருக்கல்யாண உற்சவம், இரவு வரதராஜர் வீதி உலா நடக்கிறது.
தீர்த்தக்குட ஊர்வலம்
மேட்டூர், குமரன் நகர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று காலை நடக்கிறது. அதை முன்னிட்டு நேற்று காலை ஏராளமான பக்தர்கள், மேட்டூர் காவிரியாற்றில் தீர்த்தகுடம் எடுத்து சதுரங்காடி, பஸ் ஸ்டாண்ட், பொன்னகர் பிரிவு வழியே ஊர்வலமாக, கோவிலை அடைந்தனர்.