/உள்ளூர் செய்திகள்/சேலம்/கம்பு சாகுபடிக்கு ஏற்ற பருவம் ஜூன் மானியத்தில் விதை, இடுபொருள் கிடைக்கும்கம்பு சாகுபடிக்கு ஏற்ற பருவம் ஜூன் மானியத்தில் விதை, இடுபொருள் கிடைக்கும்
கம்பு சாகுபடிக்கு ஏற்ற பருவம் ஜூன் மானியத்தில் விதை, இடுபொருள் கிடைக்கும்
கம்பு சாகுபடிக்கு ஏற்ற பருவம் ஜூன் மானியத்தில் விதை, இடுபொருள் கிடைக்கும்
கம்பு சாகுபடிக்கு ஏற்ற பருவம் ஜூன் மானியத்தில் விதை, இடுபொருள் கிடைக்கும்
ADDED : ஜூன் 01, 2024 06:34 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் வேளாண் பயிர்களான சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது:புரத சத்து நிறைந்த கம்பு, மானாவாரியில் அதிக மகசூல் கொடுக்க கூடிய முக்கிய சிறுதானிய பயிர். ஜூன், ஜூலையில் சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஆகும்.நாற்றங்கால் தயாரிப்பு: ஹெக்டேருக்கு நடவு செய்ய, 7.5 சென்ட் நாற்றங்கால் தேவை. வடிகால் வசதியுடன் இடத்தை தேர்வு செய்து, 750 கிலோ மட்கிய தொழு உரம் போட்டு உழவு செய்து நன்றாக மண்ணில் கலக்க வேண்டும். சாகுபடிக்கு தேவையான விதையை அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, 50 மில்லி, ஆறிய கஞ்சியுடன் கலந்து, 30 நிமிடங்கள் நிழலில் உலர்த்திய பின் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
நாற்றங்கால் விதைப்பு: பாத்தியில், 3.75 கிலோ விதையை, 7.5 சென்ட் நாற்றங்காலில், 2 செ.மீ., ஆழத்தில் விதைக்க வேண்டும். 500 கிலோ மட்கிய தொழு உரத்தை சீராக துாவி விதைகளை மூடுதல் வேண்டும்.நீர் நிர்வாகம்: விதைத்த, 3, 7, 12, 17வது நாட்களில் நீர் பாய்ச்சுதல் அவசியம். களிமண் பூமியில், 3, 9, 16ம் நாட்களில் தண்ணீர் பாய்ச்சினால் போதும்.நடவு வயல் தயாரிப்பு: நிலத்தை நாட்டு கலப்பை கொண்டு இருமுறையும் உழுது கட்டிகள் இல்லாமல் தயார் செய்ய வேண்டும். ஹெக்டேருக்கு, 12.5 டன் தொழு உரம் அல்லது மட்கிய தென்னை நார் கழிவை சீராக வயலில் பரப்பி நாட்டு கலப்பை கொண்டு உழுதல் வேண்டும். ஒரு ஏக்கருக்கு திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 200 மில்லி அல்லது பாஸ்போபாக்டீரியா 200 மில்லி ஆகியவற்றை, 20 கிலோ தொழு உரத்துடன் கலந்து நடவுக்கு முன் வயலில் இட வேண்டும். ஹெக்டேருக்கு சிறுதானிய நுண்ணுாட்டம், 12.5 கிலோ வீதம் மணல் அல்லது எருவுடன் கலந்து அடியுரமாக இடவேண்டும். 15 முதல், 18 நாட்கள் வயது கொண்ட நாற்றுகளை நடவுக்கு பயன்படுத்த வேண்டும். பயிரின் முக்கிய பருவங்களான பூக்கும் பருவம்(40வது நாள்) மற்றும் கதிர் உருவாகும் பருங்களில்(68வது நாள்) நீர் பாய்ச்ச வேண்டும். அறுவடை: இலைகள் மஞ்சள் நிறமாக மாறி தானியங்கள் கடினமாக இருக்கும். கதிர்களை தனியே அறுவடை செய்ய வேண்டும். இறவையில், 2,500 முதல், 3,500 கிலோவும், மானாவாரியில், 1,500 முதல், 2,500 கிலோவும் மகசூல் எடுக்கலாம். விதை, இடுபொருட்களை, பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் மானியத்தில் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.