/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா;தேரோட்டம் கோலாகலம் ஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா;தேரோட்டம் கோலாகலம்
ஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா;தேரோட்டம் கோலாகலம்
ஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா;தேரோட்டம் கோலாகலம்
ஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா;தேரோட்டம் கோலாகலம்
ADDED : செப் 15, 2025 12:52 AM
தாரமங்கலம்:தாரமங்கலம் அருகே, மல்லிக்குட்டை சென்றாய பெருமாள் கோவிலில், ஸ்ரீஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா, கடந்த, 5ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜை நடந்தது. நேற்று காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
மாலை, 4:00 மணிக்கு மேல், சிறு தேரில் விநாயகர், பெரிய தேரில் ஸ்ரீதேவி, பூதேவி, சென்றாய பெருமாள் சுவாமியை எழுந்தருளச் செய்தனர். 5:30 மணிக்கு மேல், அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள், 'கோவிந்தா' கோஷம் முழங்க, தேரை வடம்பிடித்து இழுத்துச்சென்றனர்.
தொடர்ந்து திருத்தேர், மாரியம்மன் மகமேருவை, பக்தர்கள் இழுத்தனர். முக்கிய வீதிகளில் சென்ற தேர், மீண்டும் கோவிலை அடைந்தது. தொடர்ந்து மாரியம்மன் கோவிலில் உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் பங்கேற்றனர். இன்று கருட வாகனத்தில் சுவாமி பவனி, மஞ்சள் நீராட்டு விழாவுடன், ஜெயந்தி ஜென்மாஷ்டமி விழா நிறைவடைகிறது.