/உள்ளூர் செய்திகள்/சேலம்/'முதல்வருக்கு புது உத்வேகத்தை அளிக்கும்'முதல்வருக்கு புது உத்வேகத்தை அளிக்கும்
'முதல்வருக்கு புது உத்வேகத்தை அளிக்கும்
'முதல்வருக்கு புது உத்வேகத்தை அளிக்கும்
'முதல்வருக்கு புது உத்வேகத்தை அளிக்கும்
ADDED : ஜன 13, 2024 04:05 AM
வாழப்பாடி: தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம், வாழப்பாடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் தலைமை வகித்தார். அதில், நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு பேசியதாவது:சேலத்தில் வரும், 21ல் நடக்க உள்ள, தி.மு.க., இளைஞரணி, 2வது மாநில மாநாடு, மிகப்பெரிய திருப்புமுனை மாநாடாக அமையும். இதில், 5 லட்சம் பேர் பங்கேற்க ஏற்பாடு நடந்து வரும் நிலையில், இந்த மாநாடு முதல்வர் ஸ்டாலினுக்கு, புது உத்வேகத்தை அளிக்கும் மாநாடாக நிச்சயம் அமையும். லோக்சபா தேர்தலில், மத்திய அரசு, அதன் அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தாலும், தமிழகத்தை பொறுத்தவரை, தி.மு.க., 40 தொகுதிகளிலும் நிச்சயம் வெற்றி பெறும். அதில் சேலம் மாவட்டம் முதல் இடத்தை கைப்பற்றும்படி, கட்சி நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதில், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், தி.மு.க.,வின், மேற்கு மாவட்ட செயலர் செல்வகணபதி உள்பட பலர் பங்கேற்றனர்.