/உள்ளூர் செய்திகள்/சேலம்/மண் வளம் காக்கும் ஊடுபயிர்; மானியத்தில் விதை பெற அழைப்புமண் வளம் காக்கும் ஊடுபயிர்; மானியத்தில் விதை பெற அழைப்பு
மண் வளம் காக்கும் ஊடுபயிர்; மானியத்தில் விதை பெற அழைப்பு
மண் வளம் காக்கும் ஊடுபயிர்; மானியத்தில் விதை பெற அழைப்பு
மண் வளம் காக்கும் ஊடுபயிர்; மானியத்தில் விதை பெற அழைப்பு
ADDED : ஜூன் 21, 2024 07:27 AM
பனமரத்துப்பட்டி : மண்வளம் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஊடுபயிர், மூடுபயிர் சாகுபடிக்கு விதைகளை மானியத்தில் பெற்று விவசாயிகள் பயன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் வேலு கூறியதாவது: மண்ணின் அங்கக கரிம அளவு, நுண்ணுயிர்களின் எண்ணிக்கை, நீர் பிடிப்பு தன்மை, மண்ணில் உள்ள தாவர ஊட்டச்சத்து அளவு ஆகியவற்றை பொறுத்து மண் வளம் அளவீடு செய்யப்படுகிறது.
மண் வளம் காப்பதில் மூடுபயிர், ஊடுபயிர், நிலப்போர்வை முக்கிய பங்கு வகிக்கின்றன. சூரிய ஒளி படும்படி மண் திறந்த வெளியில் விடும்பொழுது அங்கக கரிமம் குறைந்து மண் வளம் பாதிக்கப்படுகிறது. களைகளை குறைக்கவும், நீர் இழப்பு, பூச்சிகள், மண் அரிப்பை குறைக்கவும், மூடுபயிர், ஊடுபயிர் உதவுகின்றன.மூடுபயிர் மண்ணில் முழுதுமாக போர்வைபோல் விரிந்து சூரிய வெளிச்சத்தை மண்ணில் நேரடியாக படுவதை தவிர்க்கிறது. தட்டைப்பயறு, கொள்ளு பாசிப்பயறு போன்றவை மூடு பயிர்களாகும். பருவ கால பயிருக்கு இரு வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியை மறைக்க, குறுகிய கால பயிர்களான உளுத்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு போன்றவற்றை பயிரிட்டு மண் வளத்தை காப்பது ஊடுபயிர். அவை குறுகிய கால பயிர்களாக உள்ளதால், வருமானத்தை அதிகரிக்கும் காரணியாகவும் அமைகிறது.மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ஊடுபயிர், வரப்பு பயிர் சாகுபடி செய்ய துவரை விதை, உயிர் உரங்கள், இடுபொருட்கள், தேசிய உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து இயக்க திட்டத்தில், நிலக்கடலையில் ஊடுபயிராக சாகுபடி செய்ய உளுந்து விதை, உயிர் உரங்கள், இடுபொருட்களை, பனமரத்துப்பட்டி வேளாண் விரிவாக்க மையத்தில் மானியத்தில் விவசாயிகள் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.