/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாநகரில் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க அணையில் மிதவை மோட்டார் பொருத்தம்மாநகரில் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க அணையில் மிதவை மோட்டார் பொருத்தம்
மாநகரில் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க அணையில் மிதவை மோட்டார் பொருத்தம்
மாநகரில் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க அணையில் மிதவை மோட்டார் பொருத்தம்
மாநகரில் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க அணையில் மிதவை மோட்டார் பொருத்தம்
ADDED : ஜூலை 05, 2024 01:00 AM
மேட்டூர்: சேலம் மாநகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க, மேட்டூர் அணை இடதுகரை பகுதியில் உள்ள நீரில் மிதவை மோட்-டார்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேட்டூர் அணை மற்றும் காவிரியாற்றில் இருந்து குடிநீர் எடுத்து சுத்திகரித்து, சேலம் மாநகராட்சியின், 60 வார்டுகளுக்கும் வினி-யோகிக்கப்படுகிறது.
அதற்கு அணை இடதுகரையில், 50 ஆண்டு பழமையான நீரேற்று நிலையம், காவிரி கரையோரம் தொட்டில்-பட்டியில் இரு நீரேற்று நிலையங்கள் மூலம் குடிநீர் எடுக்கப்படு-கிறது.இடதுகரையில் உள்ள நீரேற்று நிலையம் மூலம் தினமும், 23 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்படும். இதில் தாரமங்கலம், வழி-யிடை கிராமங்களுக்கு, 12 லட்சம் லிட்டர், மீதி சேலம் மாநகராட்-சிக்கு வழங்கப்படுகிறது. தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப மாநகராட்சிக்கு, 13.50 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்-கப்படுகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம், 36 அடிக்கு மேல் இருந்தால், இடதுகரையில் உள்ள தொட்டியில் இருந்து தண்ணீர் எடுக்க முடியும். தற்போது நீர்மட்டம், 39.67 அடியாக உள்ளது. இன்னும், 3 அடி சரிந்தால், அணையில் மிதவை மோட்டார்கள் மூலம் தண்ணீர் எடுத்து தொட்டியில் நிரப்பி, மாநகராட்சிக்கு வினியோகிக்க வேண்டும். அதனால் தொட்டி அருகே அணை நீரில் தலா, 75 குதிரை திறன் சக்தி கொண்டது, 3; 35 குதிரை திறன் சக்தி கொண்டது, 2 என, 5 மோட்டார்களை மிதக்க-விட்டு, மாநகராட்சி தயாராக வைத்துள்ளது.இதுகுறித்து மாநகராட்சி குடிநீர் வினியோக பொறியாளர்கள் கூறு-கையில், 'மாநகராட்சிக்கு சீரான குடிநீர் வினியோகிக்க, அணை நீரில் மோட்டார்களை மிதக்க விட்டு தயாராக வைத்துள்ளோம்' என்றனர்.