/உள்ளூர் செய்திகள்/சேலம்/குட்டையை ஆக்கிரமித்து ரூ.6 கோடிக்கு விற்பனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்குட்டையை ஆக்கிரமித்து ரூ.6 கோடிக்கு விற்பனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குட்டையை ஆக்கிரமித்து ரூ.6 கோடிக்கு விற்பனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குட்டையை ஆக்கிரமித்து ரூ.6 கோடிக்கு விற்பனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குட்டையை ஆக்கிரமித்து ரூ.6 கோடிக்கு விற்பனை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 29, 2024 02:01 AM
சேலம்: குட்டையை ஆக்கிரமித்து, 6 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் விசாரித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க விவசாயி வலியுறுத்தினார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் விவசாயிகள் பேசியதாவது:
பெரியசாமி: சிங்கிபுரத்தில், வாழப்பாடி - மங்களபுரம் சாலை, சிங்கிபுரம் - சேஷன்சாவடி 4 முனை சந்திப்பில் அரசு நீர்நிலை புறம்போக்கான, 2.1 ஏக்கர் குட்டையை ஆக்கிரமித்து, போலி ஆவணம் தயாரித்து, 'பிளாட்' போட்டு, 2021 முதல் விற்பனை நடந்துள்ளது. இதற்கு வாழப்பாடி தாலுகா அலுவலகத்தில் உரிமைச்சான்று உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு, 6 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் உரிய விசாரணை நடத்தி வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி குட்டையை மீட்க வேண்டும்.
சிவக்குமார்: ஆத்துார், பைத்துார் ஊராட்சியில் தனிநபர் ஆக்கிரமித்த, 5.75 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை மீட்க, சென்னை உயர்நீதிமன்றம், 2020ல் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை.
நாகராஜ்: கொளத்துார் அடுத்த பாலமலையில் காபி செடிகளுக்கு நிழல் தரக்கூடிய சில்வர் ஓக் மரத்தை ஊடு பயிராக நடவு செய்யக்கூடாது என வனத்துறையினர் தடுப்பதால், 10,000 ஏக்கரில் காபி பயிரிட முடியாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சில்வர்ஓக் மரங்கள் நட அனுமதி பெற்றுத்தர வேண்டும்.
கோவிந்தராஜ்: கருமந்துறை வேளாண் உதவி அலுவலகத்தில் விவசாய கருவிகளான கடப்பாரை உள்பட, 7 பொருட்கள் அடங்கிய தொகுப்பை, 1,300க்கு பதில், 2,200 ரூபாய்க்கு விற்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பசுந்தாள் உரத்தை, விற்பனைக்கு வந்த நாளே, அதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டதாக கூறி, மக்கள் பிரதிநிதிகள் கை காட்டுவோருக்கு வழங்கி முறைகேடு நடக்கிறது. உண்மையான விவசாயிகளுக்கு தேவையான அளவுக்கு முன்னுரிமை அடிப்படையில் பசுந்தாள் உரம் கிடைக்க நடவடிக்கை தேவை.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
டி.ஆர்.ஓ., மேனகா, உதவி கலெக்டர் ஆக்ரிதி சேத்தி(பயிற்சி), வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.